

நாமக்கல்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (மே மாதம்) நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் ஏற்கனவே தொடங்கி விட்டனர். தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் தனது தேர்தல் பிரசாரத்தை நாமக்கலில் நேற்று தொடங்கினார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 2ஆவது நாளாக முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மலைவாழ் மக்களுடன் நடத்திய கலந்துரையாடலில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி, சோலார் வசதி செய்யப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு அதிமுக அரசு துணைநிற்கும். மலைவாழ் மக்களுக்கு சேந்தமங்கலத்தில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் கலைக்கல்லூரி கட்டப்படும். ஆன்லைன் கல்விக்காக மலை பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என்று அவர் கூறினார்.