ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நீடாமங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
Published on

நீடாமங்கலம்:

நாகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியோடு கழிவு நீர் வடிகால் சீரமைத்தல், சிறுபாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று முன்தினம் நடந்த போது சில பிரச்சினைகள் ஏற்பட்டது. இதை அறிந்த மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை கேட்டுக்கொண்டதையடுத்து ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. தாசில்தார் பரஞ்ஜோதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் குறுகலான சாலையாக இதுவரை காட்சி அளித்த நீடாமங்கலம் கடைவீதி சாலை தற்போது அகலமான சாலையாக காட்சி அளிக்கிறது. சாலையின் இருபுறமும் நடைமேடை அமைத்து தரவேண்டும். சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com