சினிமா இயக்குனரின் வீடு புகுந்து நகை-பணம் திருட்டு

ஈரோட்டில், சினிமா இயக்குனரின் வீடு புகுந்து நகை-பணத்தை துணிகரமாக திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சினிமா இயக்குனரின் வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
Published on

ஈரோட்டில், சினிமா இயக்குனரின் வீடு புகுந்து நகை-பணத்தை துணிகரமாக திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகை திருட்டு

ஈரோடு நாடார் மேடு கெட்டி நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவ ஹரிகேசவா என்கிற மோகன்குமார் (வயது 45). இவர் அக்னி, தீமைக்கும் நன்மை செய், இடரினும், தளரினும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மோகன்குமார் மனைவியுடன் வெளியே சென்றால் வீட்டை பூட்டி விட்டு சாவியை துணியில் சுற்றி ஜன்னல் ஓரத்தில் வைத்து செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதியம் மோகன்குமார் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, மனைவியுடன் வெளியே சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீடு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருந்தது.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து மோகன்குமார் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வழக்கமாக சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்ட மர்ம நபர் தான் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பட்டப்பகலில் சினிமா இயக்குனர் வீட்டின் கதவை திறந்து நகை மற்றும் பணத்தை துணிகரமாக திருடிச்சென்ற சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com