ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்- வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வீடு வீடாக சென்று அவர் பொதுமக்களை சந்தித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்- வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார்
Published on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வீடு வீடாக சென்று அவர் பொதுமக்களை சந்தித்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமைச்சர்கள் சு.முத்துசாமி, செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், ராஜகண்ணப்பன், சக்கரபாணி உள்ளிட்டோர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

பிரசாரம் தொடங்கினார்

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது வீடு, வீடாக சென்ற அவர் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது தமிழக அரசின் சாதனைகளையும், முதல்-அமைச்சர் நிறைவேற்றிய திட்டங்களையும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த பிரசாரத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, ராஜகண்ணப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் சஞ்சய் சம்பத், ராஜேஷ் ராஜப்பா உள்பட பலர் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com