திருப்பூர் கலெக்டரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி

திருப்பூர் கலெக்டர் கார்த்திகேயனின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் கலெக்டரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், தனது முகநூல் பக்கம் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு செய்திகளையும், உதவி கோரும் மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் இவரது செயல்பாடுகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும்.

இந்த நிலையில் முகநூலில் இவரது புகைப்படத்தை வைத்து சிலர் போலி கணக்கு தொடங்கி, பணம் கேட்டு நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த முகநூல் பயன்பாட்டாளர்கள், இதனை கார்த்திகேயனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இந்த போலி கணக்கு குறித்து காவல்துறை மற்றும் முகநூல் தளத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் இயங்கும் இது போன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com