விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு டிராக்டர்களுடன் பேரணி நடந்தது.
விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
Published on

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு டிராக்டர்களுடன் பேரணி நடந்தது.

காத்திருப்பு போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கீழ்பென்னாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் எதிரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 5-ந் தேதி முதல் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. சுற்றுப்புற ஊர்களில் இருந்து விவசாயிகள் உழவுக்கு பயன்படுத்தி வரும் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் பேரணியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர்.

டிராக்டர் பேரணி

கீழ்பென்னாத்தூர் சந்தை மேட்டில் இருந்து தொடங்கிய டிராக்டர் பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று காத்திருப்பு போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தது.

அப்போது மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன், தன்னார்வலர்கள் பலராமன், குமார் என்ற கிருஷ்ணராஜ், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் இயற்கை வேளாண் விவசாயிகள் கீழ்பென்னாத்தூர் கோதண்டராமன், சிறுநாத்தூர் கிருஷ்ணன், சமூக ஆர்வலர்கள் ராஜாதோப்பு கனகராஜ், கோவிந்தன், சகாதேவன், முன்னோடி விவசாயிகள் சண்முகம், சுரேஷ், நாரியமங்கலம் க.சா.முருகன் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com