வண்டலூர் உயிரியல் பூங்காவில் 18 வயதான பெண் வரிக்குதிரை "டீனா" உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை உயிரிழந்ததை தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 18 வயதான பெண் வரிக்குதிரை "டீனா" உயிரிழப்பு
Published on

வண்டலூர்:

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 18 வயதான டீனா என்ற பெண் வரிக்குதிரை கடந்த 1 மாதமாக உடல் நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து வரிக்குதிரை டீனாவிற்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை 4 மணி அளவில் வரிக்குதிரை டீனா பரிதாபமாக உயிரிழந்தது. வரிக்குதிரை இறந்ததைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பூங்கா நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட முக்கிய விலங்குகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com