திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்; இன்று நடக்கிறது

திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது.
திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்; இன்று நடக்கிறது
Published on

பரிசோதனை முகாம்

திருச்சி மாநகராட்சியில் இயங்கி வரும் அந்தந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மற்றும் மாலை நேரங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடக்கிறது. முகாம் நடைபெறும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெயர் மற்றும் இடங்கள் விவரம் வருமாறு:-

இன்று காலை பீமநகர்- பக்காளிதெரு அங்கன்வாடி மையம், பீரங்கிகுளம்-கள்ளத்தெரு, இ.பி.ரோடு- அந்தோணியார் கோவில் தெரு, எடமலைப்பட்டிபுதூர்- இன்னாசியார் கோவில்தெரு, காந்திபுரம்-நவாப்தோட்டம், இருதயபுரம்- சங்கிலியாண்டபுரம் பிரதான அங்கன்வாடி மையம், காமராஜ்நகர்- அந்தோணியார்கோவில்தெரு செம்பட்டு, காட்டூர்-ஜெகநாதபுரம், மேலகல்கண்டார்கோட்டை- ராணுவகாலனி, பெரியமிளகுபாறை- பஞ்சுகிடங்கு, ராமலிங்கநகர்-குமரன்நகர், ஸ்ரீரங்கம்-வடக்குவாசல், சுப்பிரமணியபுரம்-ராமகிருஷ்ணாநகர், தெப்பக்குளம்மலைக்கோட்டை மருந்தகம், தென்னூர்-குத்பிஷாநகர், திருவெறும்பூர்-பகவதிபுரம், திருவானைக்காவல்-மணல்மேடு, உறையூர்-வள்ளுவர்தெரு ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

மாலையில்...

இதேபோல் இன்று மாலையில் அடைக்கலமாதா கோவில் தெரு, ஜீவாநகர் தெரு, அண்ணாநகர், காலனி மெயின்ரோடு, ஆசாரிசந்து, சங்கிலியாண்டபுரம் வள்ளுவர்நகர் அங்கன்வாடி மையம், கே.கே.நகர் மெயின்ரோடு, ஸ்டாலின்நகர், கணேசபுரம் அங்கன்வாடி மையம், கீழத்தெரு, சீனிவாசநகர், கமலாநகர், ஞானதிகம்பிள்ளை தெரு, திப்பிரான்தொட்டிதெரு, அண்ணாநகர், மலைக்கோவில், ஜம்புகேஸ்வரர் நகர், அச்சடிகாரதெரு ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com