விஜய் விலையில்லா உணவகத்திற்கு ரூ.60 ஆயிரம் நிதி உதவி

விஜய் விலையில்லா உணவகத்திற்கு ரூ.60 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
விஜய் விலையில்லா உணவகத்திற்கு ரூ.60 ஆயிரம் நிதி உதவி
Published on

திருச்சி உய்யகொண்டான் பகுதியில் நடிகர் விஜய் பெயரில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாறியபின் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் தொய்வின்றி தொடர்ந்து இயங்கிடும் வகையில், மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை நிர்வாகி ஆர்.கே. ரிஷி மற்றும் அவரது நண்பர்கள் ரூ.60 ஆயிரம் நிதி உதவியை வழங்கி உள்ளனர். இதற்கான காசோலையை மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் உ.கொ.கார்த்திக் மற்றும் நிர்வாகி தளபதி ஹரி ஆகியோரிடம் வழங்கினர். இது குறித்து கார்த்திக் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்கு தினமும் விலை யில்லா உணவு வழங்கி வருகிறோம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 பேருக்கு மேல் விலையில்லாமல் உணவு வழங்குகின்றோம். இன்றுடன் 395 நாட்கள் நிறைவு பெற்று நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு இந்த விலையில்லா விருந்தகத்தை நடத்தி வருகிறோம். இது போன்ற உதவி எங்களை மேலும் உற்சாகப்படுத்துவதாக உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com