தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது
தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊதிய உயர்வு சரியாக வழங்கப்படவில்லை என்றும், புதிய வருகைப் பதிவேடு முறை தங்களை அலைக்கழிப்பதாகவும், மாநகராட்சி அலுவலர்கள் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும் கூறி 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று (நேற்று) போராட்டம் நடத்தியுள்ளனர்.

சுகாதாரம் காக்கும் தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளைக் காப்பதும், நியாயமான ஊதியம் கொடுப்பதும் அரசின் அடிப்படைக் கடமையாகும். நெல்லையில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசானது தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com