சமூக முன்னேற்றப் பணிகளிலும் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

ஆன்மிக பணிகளோடு, சமூக முன்னேற்றப் பணிகளிலும் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சமூக முன்னேற்றப் பணிகளிலும் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
Published on

சென்னை,

ஜெயேந்திரரின் மறைவைத் தொடர்ந்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:

காஞ்சிமடத்தின் 69வது மடாதிபதியான காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்ரவரி 28ந் தேதியன்று (நேற்று) காலை உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1954ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1994ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டு, காஞ்சி பெரியவருக்குப்பின் மடத்தை சிறப்பாக வழி நடத்தினார்.

சமூக முன்னேற்றப் பணி

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்க பணிகளோடு, சமூக முன்னேற்றப் பணிகளிலும் அக்கறை காட்டியவர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மிக பக்தர்களுக்கும், காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com