

சென்னை,
இவர்களில் பெரும்பாலானோர் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் ரெயில் மற்றும் பஸ்களில் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினத்துக்கு (சனிக்கிழமை) டிக்கெட் முன்பதிவு நாளை மறுதினம் தொடங்குகிறது.