அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவர்.

எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com