

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள மில்டன் ஐ.டி.ஐ. கட்டிடத்தில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.கார்த்திகேயன், திருமா பயிலகம் மற்றும் ஸ்ரீ விவேகானந்தா ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆசிரியர் சாமிதுரை வரவேற்றார். ஸ்ரீவிவேகானந்தா ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் ராமமூர்த்தி தலைமை தாங்கி இலவச நீட் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய, மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயற்சி வகுப்பு வருகிற 5-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி நன்றாக படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்றார். தொடாந்து பெரிய சிறுவத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தாவரவியல் ஆசிரியர் கார்த்திகேயன், திருவண்ணாமலை இயற்பியல் ஆசிரியர் ஏழுமலை ஆகியோ கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை நடத்தினர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.