

சென்னை,
சென்னையில் கூவம் ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று குடியிருப்புகளில் குடியேறியுள்ளனர்.
அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து 4,188 பேரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து 2,871 பேரும் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளனர். ஆனாலும், அவர்களது பெயர்கள் இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்படாமல் உள்ளது. எனவே, இவர்களது பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்தனர். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், துறைமுகம், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து குடிபெயர்ந்த 12 ஆயிரத்து 32 வாக்காளர்களின் பெயர் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று கூறினார். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.