காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி: 8-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் பிரிஜித் இன்பென்ட் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளான்.
தேனி
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சேசுராஜா. இவரது மகன் பிரிஜித் இன்பென்ட் (13 வயது). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் பிரிஜித் இன்பென்ட் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் திட்டுவார்கள் என்று நினைத்த சிறுவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






