கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் மரணம் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது

கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் மரணம் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.
கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் மரணம் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது
Published on

சென்னை,

தமிழ் திரைப்பட உலகில் 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியவர், கவிஞர் பிறைசூடன். நடந்தால் இரண்டடி...', ஆட்டமா... தேரோட்டமா...' போன்ற பாடல்களை எழுதியவர் இவர். ஏராளமான பக்தி பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

இவருக்கு ஏற்கனவே இதயக்கோளாறு இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் அவருக்கு திடீர்' மாரடைப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 65. மறைந்த கவிஞர் பிறைசூடனுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கும், மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

அவரது இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

கவிஞர் பிறைசூடன் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்தவர். அவரது மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com