திருமணம் செய்து தராததால் ஆத்திரம்: பாட்டி, பேத்தியை தீ வைத்து கொன்ற நபர்

திருமணம் செய்து தர மறுத்த ஆத்திரத்தில், பாட்டி மற்றும் பேத்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் செய்து தராததால் ஆத்திரம்: பாட்டி, பேத்தியை தீ வைத்து கொன்ற நபர்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி பகுதியை சேர்ந்த குருவம்மாள் என்பவரின் மகள் வனிதாவிற்கு, கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், 2 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் பிரிந்து சென்ற நிலையில், வனிதா வேறொருவரை திருமணம் செய்து வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரது பிள்ளைகள் இருவரையும், பாட்டி குருவம்மாள் வளர்த்து வருகிறார்.

முன்னதாக, குருவம்மாளுடன் தென்னந்தோப்பில் பணிபுரியும் ஆறுமுகம் என்பவர், வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால், அதற்குள் வனிதா வேறொருவரை திருமணம் செய்ததால், ஆத்திரமடைந்த ஆறுமுகம், தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குருவம்மாள் தனது பேரன், பேத்திகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, 3 பேர் மீதும் பெட்ரேல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் குருவம்மாள் மற்றும் அவரது பேத்தி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 15 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆறுமுகம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com