

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் ஆற்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் கலவை சாலை தாலுகா அலுவலகம் அருகே தொடங்கியது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஏ.பி.எல் ஜெகன் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு தொழிலதிபர் ஏ.வி.சாரதி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் கலவை சாலை, அண்ணாசாலை, பஸ் நிலையம், வேலூர் சாலை, ஜீவானந்தம் சாலை, ஆரணி சாலை வழியாக சென்று தாஜ்புரா பகுதியில் உள்ள கிணற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
விழாவில் இந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் பரமேஸ்வரன், இலக்கிய பிரிவு தலைவர் கனல்கண்ணன், வணிகர் பேரமைப்பு மாவட்ட தலைவர் பொன்.கு.சரவணன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.