

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கோங்கல் கிராமம். இங்கு வசித்து வரும் குமரவேல் என்பவரது மனைவி தேவி (வயது 34). இவர், நேற்று வீட்டில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷின் எந்திரத்துக்கு மின் இணைப்பு கொடுத்து உள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.