

சென்னை,
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39,968 லிருந்து ரூ.40,048 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4.996 லிருந்து 5,096 ஆக அதிகரித்துள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.74.20 க்கு விற்கப்பட்ட வெள்ளி விலை 20 காசுகள் அதிகரித்து 74.40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.