நல்லாசிரியர் விருது அறிவிப்பு -தெலங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு தெலங்கானா கவர்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நல்லாசிரியர் விருது அறிவிப்பு -தெலங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து
Published on

சென்னை,

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் திரு.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி மாவட்டம்,கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை திருமதி.மாலதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com