

சென்னை,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல் நலம் ஆகியவற்றை வழங்கட்டும். சிறப்பான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட தமிழக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயகர் சதுர்த்தி திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு மகிழ்வார்கள்.
விநாயக பெருமானின் திருவருளால் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.