மக்களின் ஆளுநர்- தஞ்சையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் மக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என புகழ்ந்து பேசினார். #MaFoiPandiarajan #BanwarilalPurohit
மக்களின் ஆளுநர்- தஞ்சையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய மாஃபா பாண்டியராஜன், "ஆரஞ்சு விளையும் நாக்பூரிலிருந்து தஞ்சைக்கு வந்துள்ள மக்கள் ஆளுநர் அவர்களே" எனப் புகழ்ந்தார். ஆளுநர் தமிழக அரசின் உரிமைகளில் தலையிடுவதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், ஆளுநரை தமிழக அமைச்சர் 'மக்களின் ஆளுநர்' எனப் புகழ்ந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் நிகழ்ச்சி கடந்த

23-ம் தேதி தொடங்கி ஜனவரி 1-ம் தேதி நிறைவடைந்தது. விழாவில் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை 'மக்களின் ஆளுநர்' எனப் புகழ்ந்தார். "மக்களின் ஆளுநர் இவர். தமிழ் படிக்கவும் பேசவும் கற்றுக்கொண்டு வருகிறார். மக்களுக்காக ஆய்வுகளை நடத்தி வருகிறார்"என ஏற்கனவே புகழ்ந்து இருந்தார்.

எம்ஜிஆரின் மதிய உணவுத் திட்டம், ஒன்றாக உணவருந்தும் மாணவர்களிடையே ஜாதி ஏற்றத்தாழ்வை ஒழிக்கிறது என கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

#MaFoiPandiarajan | #BanwarilalPurohit | #TNGovernor | #MGRStatue | #mafoikprajan | #Tamillatestnews

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com