ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபர் கைது

தேவதானப்பட்டியில் ஆட்டா டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபர் கைது
Published on: 

தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 26). ஆட்டோ டிரைவர். இன்று இவர், தேவதானப்பட்டிஅரிசி கடை ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (29) என்பவர், முரளியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் மாரிமுத்து கத்தியை காட்டி மிரட்டினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பிடிக்க ஓடி வருவதை கண்ட அவர் தப்பி ஓடினார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com