

தென்காசி,
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டு வருகிறது.
இதற்கிடையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தொடர் மழையால் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலம் அருவிகளில் 2வது நாளாக இன்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க இன்று தடைசெய்யப்பட்டுள்ளது.