திருவாரூர் மாவட்டத்தில், கொட்டித்தீர்த்த கனமழை

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் கனமழையால் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், கொட்டித்தீர்த்த கனமழை
Published on

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் கனமழையால் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

பலத்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இந்நிலையில் வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களிலும் மட்டும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி மழை விடிய, விடிய பெய்தது. மேலும் நேற்று காலை முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விடுமுறை

பலத்த மழை காரணமாக மாணவ- மாணவிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். பகல் முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதியில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகள் பழுதடைந்து பள்ளங்களாக காட்சியளித்தால் வாகன ஒட்டிகள் அவதிப்பட்டனர். தொடர்ந்து பெய்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வானம் அடிக்கடி மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பெய்த இந்த மழையால் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பொதக்குடி, வக்ராநல்லூர், வேளுக்குடி, சித்தனங்குடி, பூந்தாழங்குடி, ராமநாதபுரம், திட்டச்சேரி, திருராமேஸ்வரம், ஓகைப்பேரையூர், நாகங்குடி, பழையனூர் மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழைநீ தேங்கி நின்றது. இரவு பகலாக தொடர்ந்து பெய்த மழையால் கூத்தாநல்லூர் பகுதியில் பல இடங்களில் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- திருவாரூர்-19, நன்னிலம்-12, குடவாசல்-20, வலங்கைமான்-5, மன்னார்குடி-22, நீடாமங்கலம்-8, பாண்டவயாறு தலைப்பு-7, திருத்துறைப்பூண்டி-27, முத்துப்பேட்டை-20 . இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி- 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com