விடுமுறை கால சிறப்பு மலை ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்
விடுமுறை காலங்களில் மேட்டுப்பாளையம் - ஊட்டி வழித்தடத்தில் சிறப்பு மலை ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
நீலகிரி
நீலகிரி மலைப்பகுதிக்கு விடுமுறை காலங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் நெரிசலை குறைக்கவும், பொதுமக்களுக்கு எளிதான பயண வசதி ஏற்படுத்தவும், தெற்கு ரெயில்வே சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேட்டுப்பாளையம் - ஊட்டி வழித்தடத்தில் சிறப்பு மலை ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. விடுமுறை மற்றும் சுற்றுலா சீசன் காலங்களில் இந்த சேவைகள் மூலம் பயணிகள் சிரமமின்றி நீலகிரிக்கு சென்று இயற்கை அழகை அனுபவிக்கலாம் எனவும், முன்பதிவு வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுமாறு ரெயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story






