திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் தேன் கூடுகள் - பீதியில் பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதியில் 6 இடங்களில் தேனீக்கள் தேன் கூடுகளை கட்டியுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பீதியில் உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் தேன் கூடுகள் - பீதியில் பக்தர்கள்
Published on

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலின் கிழக்கு திசையில் 122 அடி உயரத்துக்கு 9 நிலையில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தபடவுள்ளது.

இந்நிலையில் ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதியில் 6 இடங்களில் தேனீக்கள் தேன் கூடுகளை கட்டியுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முருகன் கோவில் நிர்வாகம் தீயணைப்புத் துறையினர் வாயிலாக தேன்கூட்டை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி, முருகன் கோவில் சூப்பிரண்டுகள் சித்ராதேவி, ஐயம்பிள்ளை உள்ளிட்டோர் தலைமையில் கோவில் ஊழியர்கள், மலைக்கோவில் மற்றும் சரவணப் பொய்கை திருக்குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் மலைப்படிகளில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com