நெற்பயிரை தாக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரை தாக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
நெற்பயிரை தாக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
Published on

நெற்பயிரை தாக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண்மை விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

25 சதவீதம் மகசூல் பாதிப்பு

நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு, சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பும் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எலிகளின் சிறுநீர், அதன் புழுக்கை, ரோமங்கள் மற்றும் துர்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தம் ஏற்பட்டு அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 30-ல் இருந்து 50 கிராம் உணவு மற்றும் 40 மில்லி தண்ணீரை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது. எலிகளின் பற்கள் ஒரு நாளைக்கு 0.40 மில்லி மீட்டர் தோராயமாக ஒரு மாதத்திற்கு 1.2 சென்டி மீட்டர் வரை வளரும். அந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் பற்கள் தாடையை கிழித்து அதன் மூலம் ரத்தம் வெளியேறி எலிகள் இறந்துவிடும். அதனால் தான் எலிகள் தன்னுடைய பற்களை ஏதாவது ஒரு பொருளை கடித்துக் கொண்டே இருக்கும். அதன் மூலம் பற்களின் வளர்ச்சி தடைப்படும்.

எலி ஒழிப்பு முகாம்

நெற்பயிரில் அனைத்துப்பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதன் தாக்குதல் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும். எலிகளை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தி எலிகளை ஒழிக்கலாம். எலிப்பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும், கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

ரசாயன பூச்சி கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய்- கருவாடு ஆகியவற்றில் கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்திற்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com