"கலைஞர் வழியில் வாழ்ந்து வருகிறேன்" - புத்தக வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
"கலைஞர் வழியில் வாழ்ந்து வருகிறேன்" - புத்தக வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

சென்னை,

கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.பிறகு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக திருச்சி சிவா திகழ்கிறார். கட்சி பணியில் தனது உழைப்பால் உயர்ந்தவர் திருச்சி சிவா.எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக. மிசா என்ற சிறைச்சாலையில் பயின்றவர்கள் நாங்கள். யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்.

ஒரு எம்.பி., எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக திருச்சி சிவா விளங்குகிறார். 75 ஆண்டுகளாக இயக்கம், கொடி, சின்னம் மாறவில்லை. என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார். என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார். கலைஞராக அல்ல அவரின் வழியில் வாழ்ந்து வருகிறேன்.பொய்களை எப்படி உண்மையா மாற்றலாம் என யோசித்துக் கொண்டு எதிரிகள் வருகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com