

சென்னை,
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கான அலுவலகம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மீதான விசாரணை அதிகாரிக்கான அலுவலகம் பொதிகை வளாகம், பி.எஸ்.குமாராசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), சென்னை-600028 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக புகார் ஏதும் கொடுக்க விரும்புவோர் 25-ந் தேதியில் (இன்று) இருந்து 10 தினங்களுக்குள் மேற்படி விசாரணை அலுவலகத்திற்கு எழுத்து மூலமாக அல்லது inquirycomn.vc.annauniv@gmail.comஎன்ற அலுவலகத்தின் மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.