ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட டோக்கன் கேட்டு அலையும் மக்கள் - தொடரும் ஏமாற்றம்

ஈரோடு மாநகராட்சியில் 10 மையங்களில் தினசரி 100 முதல் 300 வரை தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட டோக்கன் கேட்டு அலையும் மக்கள் - தொடரும் ஏமாற்றம்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. ஈரோடு மாநகராட்சியில் 10 மையங்களில் தினசரி 100 முதல் 300 வரை தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்த தடுப்பூசிகள் போட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். ஒருநாள் முன்னதாகவே பலரும் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று இடம்பிடித்து வருகிறார்கள். அதிகாலையிலேயே வந்து தடுப்பூசி மையத்தில் இடம் பிடிப்பவர்களும் உள்ளனர். வரிசையில் ஆளுக்கொரு கல் வைத்து இடம் பிடித்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நிற்கும் நிலையும் உள்ளது.

இவர்கள் ஒருபுறம் இருக்க காலையில் சாவகாசமாக வந்து எப்படியாவது டோக்கன் கிடைத்து விடாதா என்று வரிசையில் காத்து நின்று ஏமாற்றம் அடைந்து செல்பவர்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு மையத்தில் இல்லை என்றால் அடுத்து எங்கு ஊசி போடுகிறார்கள் என்று கேட்டு அலைந்து திரிந்து அங்கும் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

ஒரு நாளைக்கு வரும் ஊசிக்கு தகுந்த டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மீதம் உள்ளவர்கள் திரும்ப அனுப்பப்படுகிறார்கள். இதை தவிர்க்க, வரிசையில் நிற்கும் அனைவருக்கும் அடுத்தடுத்த தேதிகள் போட்டு டோக்கன் வழங்கினால் அவர்கள் குறிப்பிட்ட தேதியில் வந்து ஊசிபோட்டு செல்வார்கள். இப்படி உயிருக்கு பயந்து இடம் பிடிக்கும் நிலை ஏற்படாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com