கோபியில் அரசு பஸ் ஜப்தி

கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கோபியில் அரசு பஸ் ஜப்தி
Published on

கடத்தூர்

கோபி அருகே உள்ள சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 50). கட்டிட தொழிலாளி. கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி ஓலப்பாளையம் பிரிவு அருகில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெகநாதன் அதே இடத்தில் இறந்தார். இது தொடர்பாக ரூ.20 லட்சம் நஷ்டஈடு கேட்டு அவருடைய மனைவி அலமேலு, மகன்கள் நித்தியானந்தம், தனபால் ஆகியோர் 2012-ம் ஆண்டு கோபி 3-ம் வகுப்பு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் இறந்த ஜெகநாதன் குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் 4 லட்சத்து 40 ஆயிரத்து 720 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து நிர்வாகம் ஜெகநாதன் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோபி பஸ் நிலையத்தில் திருப்பூர் செல்ல புறப்பட தயாராக இருந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com