மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி - தமிழிசை சவுந்தரராஜன் டுவீட்

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி - தமிழிசை சவுந்தரராஜன் டுவீட்
Published on

சென்னை,

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை. அதற்காக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக எந்த நிறுவனத்திற்கும்டெண்டர் விடப்படவில்லை. 2014 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கானபூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில் அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டு வரும் சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதி ஒதுக்கி அரசாணை வரும் என்பது நடைமுறை.

காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்த பின்னர் 60 ஆண்டுகளில் வந்தது 9 இடங்களில் மட்டுமே. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது. நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com