தேனி பகுதியில் மது விற்ற 8 பேர் கைது

தேனி பகுதியில் மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி பகுதியில் மது விற்ற 8 பேர் கைது
Published on

ரோந்து பணி

தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற வலையபட்டியைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 44), போடேந்திரபுரத்தை சேர்ந்த மலைச்சாமி (38), சொக்கத்தேவன் பட்டியை சேர்ந்த முத்தையா (49) தேனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரசாந்த் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்கள் மற்றும் ரூ.850 பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற சின்னமனூர் நடுத்தெருவை சேர்ந்த மாரிசாமி (52), அல்லி நகரத்தைச் சேர்ந்த அஜித் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

மது பாட்டில்கள் பறிமுதல்

அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது மது விற்ற போடி குலாலர் பாளையத்தைச் சேர்ந்த அரவிந்தன் (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வீரபாண்டி பகுதியில் மதுவிற்ற வீரபாண்டி மேல தெருவை சேர்ந்த முத்து ஜெயமணி (56) என்பவரை வீரபாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் கைது செய்தார். அவரிடம் இருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com