பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் கூறினார்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை விண்ணப்பித்து, வைப்புத்தொகை பத்திரம் பெற்ற பயனாளிகளில், முதிர்வு தொகை கிடைக்கப் பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் சமூக நல விரிவாக்க அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04546-254368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com