கோவை மாநகராட்சி பெயரில் வெளியான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது - மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் பேட்டி

கோவை மாநகராட்சி பெயரில் வெளியான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது என்று மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி பெயரில் வெளியான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது - மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் பேட்டி
Published on

கோவை,

மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்றும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமர் மோடி அவர்களை கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவை அரசுப்பள்ளியில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சி அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என மாநகராட்சி பள்ளியின் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை படிவத்தில் கேள்வி இடம்பெற்றுள்ளது.

இதனால் கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய பாடமா என்றும், இந்தி அடங்கிய மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பெயரில் வெளியான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது என்றும் மாநகராட்சி தரப்பில் விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்பட இல்லை என்று மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com