சுப்ரீம்கோர்ட்டு வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அம்பேத்கர் சிலை திறக்கப்பட்ட இந்தச் சிறப்புமிகு அரசியலமைப்புச் சட்ட நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம்கோர்ட்டு வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் ,

"சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை திறக்கப்பட்ட இந்தச் சிறப்புமிகு அரசியலமைப்புச் சட்ட நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்பண்புகளை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக்கத்தைச் செலுத்துவோம். அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம் ஆகும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com