

திருப்புவனம் யூனியனை சேர்ந்த முக்குடி ஊராட்சியில் உள்ள செங்குளம் கிராமத்தில் புதிதாக கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் புதிய கிளை அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின்பு அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் சிறுசேமிப்பு கணக்கு, தொடர்வைப்பு கணக்கு, கால வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் தங்கத்தாயி, ஊராட்சி செயலர் சுரேஷ், அஞ்சல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மானாமதுரை அஞ்சல் துணை கோட்ட கண்காணிப்பாளர் கனகசுந்தரம் நன்றி கூறினார்.