சென்னையில் அதிகரிக்கும் கொரோனா...! மண்டல வாரியாக பாதிப்பு - முழு விவரம்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மண்டல வாரியாக பாதிப்பு - முழு விவரம்
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா...! மண்டல வாரியாக பாதிப்பு - முழு விவரம்
Published on

சென்னை

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் அதிக அளவாக ராயபுரம் மண்டலத்தில் மூவாயிரத்து 859 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் மண்டலத்தில் 813 பேருக்கும், மணலி மண்டலத்தில் 328 பேருக்கும், மாதவரம் மண்டலத்தில் 614 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் இரண்டாயிரத்து 835 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் மூவாயிரத்து 859 பேருக்கும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் இரண்டாயிரத்து 167 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர் மண்டலத்தில் 807 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 974 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் இரண்டாயிரத்து 518 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் இரண்டாயிரத்து 431 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 54 பேருக்கும், ஆலந்தூர் மண்டலத்தில் 400 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 274 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 415 பேருக்கும், சோழிங்க நல்லூர் மண்டலத்தில் 390 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com