

சென்னை,
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக வருமான வரி துறையினர் முன்னிலையில் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதா இல்ல மதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஆய்வு பணியில் ஆட்சியர், வட்டாட்சியர், பொது பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சாட்சியத்திற்காக மட்டுமே வருமான வரி துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். வேதா இல்லத்தில் ஒரு மணிநேரம் ஆய்வு நடைபெறும் என கூறியுள்ளார்.