"தலைக்கேறிய போதை..!" 120 அடி உயர பனை மரத்தில் உறங்கிய மதுபிரியர் ராட்சத கிரேன் மூலம் மீட்பு.!

பொள்ளாச்சி அருகே பனைமரத்தில் மீது ஏறி உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
"தலைக்கேறிய போதை..!" 120 அடி உயர பனை மரத்தில் உறங்கிய மதுபிரியர் ராட்சத கிரேன் மூலம் மீட்பு.!
Published on

கோவை,

பொள்ளாச்சி அருகே பனைமரத்தில் மீது ஏறி உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஜமீன் கொட்டாம்பட்டி பகுதியில் சாலையோரம் உள்ள 120 அடி உயர பனை மரத்தின் மேல் ஒருவர் உறங்கிக்கொண்டிருப்பதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு உறங்கிய தீயணைப்பு துறையினர், 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி, இரும்பு கூண்டு பொருத்தப்பட்ட ராட்சத கிரேன் மூலம் அந்த நபரை மீட்டு பத்திரமாக கீழே கொண்டுவந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆனைமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணன் என்பது தெரியவந்தது. அந்த நபரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கே திரண்டதால், அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com