திருத்தணி அருகே மீட்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி இரும்பு வேலி அமைப்பு

திருத்தணி அருகே மீட்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி அருகே மீட்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி இரும்பு வேலி அமைப்பு
Published on

திருத்தணி தாலுகா தாழவேடு காலனியில் புல எண்.242-ல் குட்டை புறம்போக்கு 2 ஏக்கர் அரசு நிலம், தும்பிக்குளம் கிராமத்தில் புலஎண். 222/3 குட்டை புறம்போக்கு 90 சென்ட் அரசு நிலத்தை, அதே பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் ஆக்கிரமித்து பயிரிட்டு இருந்தனர். ஆக்கிரமித்த நிலத்தை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை வருவாய் துறையினர் 2 விவசாயிகளிடம் அறிவித்திருந்தும் பலனில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம் உத்தரவின்படி, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வருவாய்த் துறையினர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட தாழவேடு, தும்பிக்குளம் ஆகிய 2 இடத்தில் பொதுமக்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நிலத்தைச் சுற்றி இரும்பு வேலிகளை திருத்தணி தாசில்தார் விஜயராணி தற்போது அமைத்துள்ளார். மீட்கப்பட்ட இந்த நிலத்தின் அரசு சந்தை மதிப்பு ரூ.60 லட்சம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com