திமுக - தவெக இடையே போட்டியா? விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்று தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார்.
திமுக - தவெக இடையே போட்டியா? விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல - எடப்பாடி பழனிசாமி
Published on

சேலம்,

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முன் எப்பேதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். ஏனென்றால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் வரை என ரசிகர்களை தன்னகத்தே கெண்டிருப்பவர் நடிகர் விஜய்.

தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கெள்கை எதிரி என்றும் கூறி வரும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு முதல் தற்பேதைய தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெகவிற்கும்தான் பேட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார். இதன் தாக்கம் தேர்தலில் எதிரெலிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டைப் பெறுத்தவரை கடந்த அரை நூற்றாண்டுகளாக திமுக - அதிமுக தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். திமுக-விற்கும், அதிமுக-விற்கும் இடையேதான் பேட்டி நிலவி வருகின்றனர். பாமக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் என தமிழ்நாட்டின் பெரிய கட்சிகள் அனைத்தும் கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருகின்றனர். இவர்கள் கூட்டணிக்கு கடந்த காலங்களில் முக்கிய ஆதரவு அளித்தாலும், கூட்டணிக்கு திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தலைமை தாங்கி வருகின்றனர்.

ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் செல்லுமிடம் எல்லாம் திமுக - தவெகதான் பேட்டி என்று திரும்ப திரும்ப கூறி வருவது அதிமுக-விற்கு பின்னடைவை உண்டாக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இந்த கட்சியின் தூண்களாகவும், இரட்டை இலை சின்னம் இவர்களின் பலமாக இருந்தாலும் தற்பேதைய அதிமுக தலைமை, அதிமுக-விற்குள் நடக்கும் உட்கட்சி பூசல் அக்கட்சியின் அடிமட்ட தெண்டர்கள் மத்தியிலும் வேதனையை உண்டாக்கியுள்ளது. இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை பலமாக வலுப்படுத்தி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த சூழலில், விஜய் செல்லுமிடம் எல்லாம் திமுக- தவெக இடையேதான் பேட்டி என்ற கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாக பதித்து வருகிறார். விஜய்யின் இந்த கருத்தை அதிமுக உடைக்காவிட்டால் அதிமுக-விற்கு பெரும் சிக்கல் உண்டாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார். 2026 தேர்தலில் திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது என சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com