செஞ்சி, விக்கிரவாண்டியில் ஜமாபந்தி தொடங்கியது

செஞ்சி, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது.
செஞ்சி, விக்கிரவாண்டியில் ஜமாபந்தி தொடங்கியது
Published on

செஞ்சி, 

அமைச்சர் தொடங்கி வைத்தார்

செஞ்சி வட்டத்திற்கான 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு ஜமாபந்தி அலுவலரும், திண்டிவனம் உதவி கலெக்டருமான அமீத் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் ஜமாபந்தியில் வரப்பெற்ற மனுக்களை பரிசீலனை செய்து, தகுதி வாய்ந்தவற்றை தேர்வு செய்தனர்.

நீர், மோர் பந்தல் திறப்பு

இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க. ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், தனி தாசில்தார் மெகருன்னிசா, ஜமாபந்தி மேலாளர் அலெக்சாண்டர், துணை தாசில்தார்கள் தட்சிணாமூர்த்தி, வெங்கடேசன், செல்வமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் துரைசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செஞ்சி கேசவலு, சுப்பிரமணியன் வல்லம் நீலவேணி, சிவகாமி, பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் உட்பட பலா கலந்து கொண்டனர். முன்னதாக தாலுகா அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களின் நலன்கருதி செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் ஏற்பாட்டின்பேரில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி தலைமை தாங்கி, சித்தலம்பட்டு வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், தனி தாசில்தார் கணேஷ், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, வட்ட சார்ஆய்வாளர் சுரேஷ், மேலாளர் சங்கரலிங்கம், துணை தாசில்தார் ஏழுமலை, வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், ராஜேஷ், உதவி இயக்குனர் மாதவன், தோட்டக்கலை அலுவலர் அனுசுயா, சுகதார ஆய்வாளர் பிருத்திவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேல்மலையனூர்

மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் கோவர்த்தனன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றா. இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி, முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை சந்திரகுப்தன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறையினர், தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com