ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1700 கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் மறுப்பு ?

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1700 கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #JayalalithaaBirthday #TNGovt #BanwarilalPurohit
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1700 கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் மறுப்பு ?
Published on

சென்னை

தமிழகமே போராட்டக்களமாக மாறி உள்ள நிலையில், அவசர ஆலோசனை நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோர் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நேற்று பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசு மீது, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதையும் கவர்னர் கேட்டறிந்தார்.

மேலும் நேற்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைதானது குறித்தும், அ.தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரதம் இருப்பது குறித்த முழுவிவரங்களையும் கேட்டறிந்த அவர், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்தும் ஆலோசித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1700 கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார் என தகவல் வெளியாகி உள்ளது.

கைதிகளின் குற்றப்பின்னணியை தெரிவித்தால் மட்டுமே ஒப்புதல் என ஆளுநர் தெரிவித்ததாகவும் இது தொடர்பாக கடந்த 24-ம் தேதியிலிருந்து ஆளுநருடன், தலைமை செயலர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com