ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது போலீஸ் நிலையத்தில் கோப்புகளை பார்வையிட்டு, போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் பெண்கள் குடும்ப வன்முறையின் காரணத்தினால் வரும் வழக்குகளை விசாரணை செய்து பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்ட குடும்பத்தினர் கணவன்- மனைவி ஒற்றுமையுடன் உள்ளார்களா? அல்லது மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்படுகின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அவ்வாறு விசாரணை முடித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்ட குடும்பத்தினர் 3 முறைக்கு மேலும் பிரச்சினை தகராறு செய்து கொண்டால் தகராறு செய்பவர் மீது அவசியம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார். பின்னர் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார்களிடம் குறைகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த குழந்தைகள் விளையாடும் இடங்களை பார்வையிட்டு இங்கு வரக்கூடிய குடும்பத்தினர் குழந்தைகளுடன் வருகின்றனரா?, இங்கு விளையாடுகின்றனரா? எனவும் கேட்டறிந்தார். ஆய்வின்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, சப்- இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com