ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது.
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

கடந்த மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தும் ஏற்றத்துடனும் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.39,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.4,958-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை தங்க விலை விவரம்:-

1 கிராம் தங்கம்.......................... 4,958

1 பவுன் தங்கம்...............................39,664

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com