கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் பெற்றோருக்கு நீதிபதி சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் - சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என நீதிபதி கூறினார். சென்னை
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் பெற்றோருக்கு நீதிபதி சரமாரி கேள்வி
Published on

சென்னை

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி முதல் வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? இறப்புக்கு காரணம் என்ன நீதிபதி கேள்வி விடுத்தார்.

வெளிநாட்டில் இருந்த தந்தை 14ம் தேதி தான் வந்தார், வன்முறையில் பெற்றோருக்கு தொடர்பு இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும், 4500 மாணவர்களின் நிலை என்ன?, சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன; திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்று தெரிகிறது.திடீர் கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல. திட்டமிட்ட சம்பவம்.சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து கொண்டால் நீதிமன்றம் எதற்கு.

நீதிமன்றத்தை நாடிய நிலையில் நம்பிக்கை இல்லையா?.போலீசார் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?, போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்?கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக யூடியூப் சேனல்கள் விசாரணை நடத்துவதை தடுக்க வேண்டும்.அதுபோன்ற யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும்.

வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்;

3 டாக்டர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும், தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு நடத்தப்பட்டது என மனுதாரர் தர்ப்பில் வாதிடப்பட்டது.தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம், நீங்கள் நிபுணரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.தற்போது கைது செய்ததோடு வேலை முடிந்து விட்டதாக காவல்துறை நிறுத்தி கொள்ள கூடாது;கலவரத்துக்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும்.

பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர் வேறு எந்த பிரச்சனையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்;இறுதி சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும்.மேலும் போலீசாரின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என ஐகோர்ட்டு கூறி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com